Body

DIET Chennai Emblem
DIET Chennai Emblem

District Institute of Education and Training (DIET), Chennai

Upgraded in 1990, the District Institute of Education and Training (DIET), Chennai, located at the historic Lady Willingdon Campus, has been a cornerstone in the realm of teacher education in Tamil Nadu. Founded with the support of the Ministry of Human Resource Development (MHRD), Government of India, and approved by the National Council for Teacher Education (NCTE), Bangalore, DIET Chennai commenced its journey with an initial intake of 50 students for the Diploma in Elementary Education (D.El.Ed.) program. This capacity was subsequently doubled to 100 students per year, reflecting its growing prominence and commitment to nurturing quality educators.

வரலாற்றுச் சிறப்புமிக்க விலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET), 1990-ல் தரம் உயர்த்தப்பட்டது. முன்னதாக, தமிழ்நாட்டு வரலாற்றில் தொடக்கக்கல்விக்கான ஆசிரியர் கல்வியின் மூலைக்கல்லாக இந்நிறுவனம் விளங்கி வந்தது. கல்விக்கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களின் பயனாக, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதிநல்கையுடன் புதுப்பொலிவுடன் 1991 ஆம் ஆண்டு முதல் புதிய கட்டடத்தில் இந்நிறுவனம் செயல்படத் தொடங்கியது. தேசிய ஆசிரியர் கல்விக் கூட்டமைப்பின் (NCTE) ஆதரவுடன் தொடக்கக்கல்விக்கான ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு (D.El.Ed.) இந்நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் 50 மாணவர்களுக்கு இப்பட்டயப்படிப்பில் இணைந்து படிப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. காலப்போக்கில், ஆண்டுக்கு 100 ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான இடம் வழங்கப்பட்டது. இது இந்நிறுவனத்தின் வளர்ச்சியையும், தரமான கல்வியாளர்களை வளர்க்கும் உறுதியையும் பிரதிபலிக்கிறது.

Dr. S. Shameem

Dr. S. Shameem

Principal, DIET, Chennai

Principal's Desk

District Institute of Education and Training (DIET), Chennai, located in the historic Lady Willingdon Campus, has been a pivotal institution in shaping quality teacher education since its establishment in 1990. As a premier teacher education institute functioning under the guidance of SCERT, Department of School Education, Government of Tamil Nadu, DIET Chennai is dedicated to strengthening the academic foundation of school education across all levels within the district.


We are committed to solving educational challenges at the grassroots through research-based interventions, academic outreach, and continuous teacher professional development programs. Our goal is to foster an inclusive and reflective learning environment that empowers educators, uplifts students, and contributes meaningfully to the progress of school education in Chennai district.

சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET), விலிங்டன் சீமாட்டி கல்வி வளாகம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வியிலும் பணித்திறத்திலும் தரத்தை மேம்படுத்துவதை இந்நிறுவனம் தன் இலக்காகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (SCERT) வழிகாட்டுதலுடன் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. பள்ளிக்கல்வியின் அனைத்து நிலைகளிலும் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆதாரமாகவும், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சியில் முன்னணி நிறுவனமாகவும் இந்நிறுவனம் செயல்படுகிறது.


நாங்கள் பள்ளிக்கல்வியில் ஏற்படும் சவால்களை கல்வி ஆராய்ச்சிகளின் வழியாகவும், கல்வி வழிகாட்டுதல்களுடன் பள்ளிகளை ஆதரிப்பதாலும், ஆசிரியர் பணித்திற மேம்பாட்டை உறுதி செய்வதன் வழியாகவும் தீர்க்க முயற்சிக்கிறோம். சென்னை மாவட்டத்தில், மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஆழ்ந்த சிந்தனையை வளர்க்கும் உள்ளடக்கிய கல்விச் சூழல்களை அனைத்துப் பள்ளிகளிலும் உருவாக்குவதை இலக்காகக் கொண்டு களப்பணியாற்றி வருகிறோம்.

  • 26FEB 2025
    Prevention of child sexual abuse: In-service teacher training for primary teachers
  • 12FEB 2025
    Educational video creation for Manarkeni app.
  • 21JAN 2025
    Conduct of State Leve Achievement Survey (SLAS) in Chennai